மகனின் காதல் விவகாரம், தாய் தற்கொலை, போலீஸ் காரணமா? உறவினர் சாலை மறியல்

மகனின் காதல் விவகாரம், தாய் தற்கொலை, போலீஸ் காரணமா? உறவினர் சாலை மறியல்
X
மகனின் காதல் விவகாரத்தில் காவல்துறையினர் விசாரணை என்ற பெயரில் நெருக்கடி கொடுத்ததால் சேலத்தில் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக புகார் எழுந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சேலம் அன்னதானப்பட்டி பகுதியை சேர்ந்த அஜீத் என்ற வாலிபர் சந்தைப்பேட்டை பகுதிகளில் உள்ள நூலகம் ஒன்றில் பணியாற்றி வருகிறார்.அதே நூலகத்தில் பணியாற்றும் 16 வயதானசிறுமி. சிறுமியும், அஜித்தும் கடந்த சில நாட்களுக்கு முன் ரகசியமாக காதல் திருமணம் செய்துகொண்டதாக தெரிகிறது.

இந்த நிலையில் 16 வயது சிறுமியான தனது மகளை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாக அவரது தந்தை செவ்வாய்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் அஜித்தின் தந்தை ராஜா. தாயார் சம்பூரணம் ஆகியோரை செவ்வாய்பேட்டை காவல்நிலையத்திற்கு வரவழைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

காவல்துறையினரின் நெருக்கடியால் மன உளைச்சலுக்கு ஆளான சம்பூரணம் நேற்று விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். விசாரணை என்ற பெயரில் அடிக்கடி காவல் நிலையத்திற்கு வரவழைத்து மிரட்டியதால் சம்பூர்ணம் தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

சம்பூரணத்தின் தற்கொலை தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று உறவினர்கள் அன்னதானப்பட்டி பகுதியில் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். துறை ரீதியான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அதன் பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!