சேலத்தில் 400 கிலோ குட்கா, ரூ.1 லட்சம் பணம் பறிமுதல்: 8 பேர் கைது

சேலத்தில் 400 கிலோ குட்கா, ரூ.1 லட்சம் பணம் பறிமுதல்: 8 பேர் கைது
X
சேலம் அம்மாப்பேட்டை அருகே 400 கிலோ குட்கா பொருட்களை விற்பனைக்காக எடுத்த வந்த 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

சேலம் அம்மாப்பேட்டை குமரகிரி ஏரி அருகே அம்மாபேட்டை காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியே வந்த ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனமும் நின்றிருந்த போலீசாரை பார்த்தவுடன் திரும்பிச் செல்ல முயற்சித்துள்ளனர்.

இதனையடுத்து காவல்துறையினர் ஆட்டோவை மடக்கி சோதனை செய்தபோது, ஆட்டோவில் 8 லட்சம் மதிப்பிலான 400 கிலோ குட்கா, ஒரு லட்சம் பணம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார், கடத்தலுக்கு பயன்படுத்திய ஆட்டோ மற்றும் இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் ஆட்டோவில் வந்த 5 பேர் மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் என 8 பேரை கைது செய்தனர்.

தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், வட மாநிலத்தைச் சேர்ந்த ஜெயராம் சவன்ராம் ஆகிய இருவரிடம் இருந்து மொத்தமாக குட்கா பொருட்களை வாங்கி அவற்றை கார்த்தி, சண்முகசுந்தரம், முகேஷ், சேட்டு, குமார், மணிகண்டன், ஆகிய 6 பேரும் சேலம் குமரகிரி பேட்டை, மாசிநாயக்கன்பட்டி, சிவதாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சில்லறை விற்பனை செய்து வந்ததாகவும், தற்போது சில்லறை விற்பனைக்காக ஆட்டோவில் கொண்டு சென்றதும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
ai in future agriculture