சேலம்: பெண் காவலர்களுக்கு இருசக்கர வாகனம் மடிக்கணினி வழங்கப்பட்டது

சேலம்: பெண் காவலர்களுக்கு இருசக்கர வாகனம் மடிக்கணினி வழங்கப்பட்டது
X
சேலத்தில் "Women Help Desk" பணிக்காக 16 இருசக்கர வாகனம் மற்றும் மடிக்கணினியை பெண் காவல் ஆளிநர்களுக்கு மாநகர காவல் ஆணையாளர் வழங்கினார்.

சேலம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் "Women Help Desk" எனும் பணிக்காக, மாநகரில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் பணிபுரியும் பெண் காவல் அதிகாரிகள் மற்றும் பெண் காவல் ஆளிநர்களுக்கு, மகளிர் மற்றும் குழந்தைகளிடம் இருந்து பெறப்படும் புகார் மனுக்கள் மற்றும் 181, 1098, 112 & 100 ஆகிய தொலைபேசி எண்கள் மூலம் பெறப்படும் புகார் மனுக்களை விசாரிக்க ஒவ்வொரு காவல் நிலையத்திற்கும் பெண்கள் பயன்படுத்தும் இருசக்கர வாகனம் ஒன்று மற்றும் ஒரு லேப்டாப் என மொத்தம் 16 இருசக்கர வாகனங்கள் மற்றும் 16 லேப்டாப் போன்றவற்றை சேலம் மாநகர காவல் ஆணையாளர் சந்தோஷ் குமார் வழங்கி அவற்றின் செயல்பாடுகள் மற்றும் உபயோக முறைகளை பெண் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் முன்னிலையில் விளக்கமாக எடுத்துக் கூறினார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!