விரைவில் கொரோனா இல்லாத சேலம் மாநகராட்சி... ஆணையாளர் விருப்பம்

விரைவில் கொரோனா இல்லாத சேலம் மாநகராட்சி... ஆணையாளர் விருப்பம்
X

சேலம் மாநகராட்சி அம்மாபேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட களப்பணியாளர்களுக்கு என்95 மாஸ்க் மற்றும் சனிடைசர் வழங்கிய, மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ்.

கொரோனா தொற்று இல்லாத சேலம் மாநகராட்சி விரைவில் உருவாக, களப்பணியாளர்கள் தீவிரமாக களப்பணியாற்ற வேண்டும் என்று, சேலம் மாநகராட்சி ஆணையாளர் அறிவுறுத்தியுள்ளார்.

சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கண்காணிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நோய் தொற்று தடுப்பு களப்பணியில் 1200 நோய் தொற்று கண்டறியும் களப்பணியாளர்களும், 160 நகர்ப்புற சுகாதார செவிலியர்கள், பகுதி சுகாதார செவிலியர்கள், பரப்புரையாளர்கள், பரப்புரை கண்காணிப்பாளர்கள், பரப்புரையாளர் ஒருங்கிணைப்பாளர் மற்றும் கணினி உதவியாளர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

களப்பணியாளர்களை ஒருங்கிணைத்து பணிகளை தீவிரப் படுத்தும் வகையில் 60 வார்டுகளுக்கும் தலா ஒரு அலுவலரும், 4 வார்டுகளை ஒருங்கிணைத்து கண்காணிக்கும் வகையில் 15 முதன்மை அலுவலர்களும் களப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். உதவி ஆணையர்கள், மருத்துவ அலுவலர்கள், சுகாதார அலுவலர்கள் மற்றும் மருத்துவக் குழுவினர்களின் வழிகாட்டுதலின்படி பணியாற்றும் களப்பணியாளர்களின் களப்பணியினை தீவிரப்படுத்தும் வகையில் மாநகராட்சி ஆணையாளர், அவ்வப்போது களப்பணியாளர்களுடன் கலந்துரையாடி, ஆய்வு மேற்கொண்டு வருகின்றார்.

அவ்வகையில், சேலம் அம்மாப்பேட்டை மண்டல அலுவலக வளாகத்தில் களப்பணியாளர்களுடன், மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் கலந்துரையாடியதோடு, களப்பணியாளர்களுக்கு என்95 முகக்கவசங்கள் மற்றும் சானிடைசர்களை வழங்கினார். தொடர்ந்து, அவர்களிடம் பேசிய ஆணையாளர், சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் பொது மக்களின் ஒத்துழைப்புடன், களப்பணியாளர்களின் தீவிர பணியின் காரணமாக கொரோனா நோய் தொற்று வெகுவாக குறைந்து வருவதாக பாராட்டினார்.

கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், பணியில் எவ்வித தொய்வுமின்றி களப்பணியாளர்கள் தொடர்ந்து பணியாற்றி, சேலம் மாநகரில் தொற்று இல்லா நிலையை உருவாக்க வேண்டும். களப்பணியாளர்களிடம் உண்மையான விவரங்களை தெரிவித்து சேலம் மாநகரம் கொரோனா தொற்று இல்லா மாநகரமாக திகழ பொதுமக்கள் இணைந்து செயல்பட வேண்டும் என்று, ஆணையாளர் கேட்டுக்கொண்டார்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil