கொரோனாவுக்கு நண்பன் பலி: வேதனையில் காந்தி சிலையிடம் முறையிட்டவரால் பரபரப்பு!
சேலம் செவ்வாய்பேட்டை பகுதி சேர்ந்தவர் காமராஜ்(46). இவர், ஆயுத எழுத்து தமிழ் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வருகிறார். இதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர் வழக்கறிஞர் கந்தசாமி(45) கொரோனாவால் பாதிக்கப்பட்டு இன்று சேலம் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.
நண்பர் உயிரிழந்த துக்கம் தாங்கமுடியாத காமராஜ், கதறியழுதார். பின்னர், பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள காந்தி சிலைக்கு வருகை தந்த காமராஜ், சிலையின் அமைந்துள்ள மேடையின் மீது ஏறி உண்ணாவிரதத்தில் ஈடுபட முயற்சித்தார்.
மேலும் நாட்டு மக்களுக்கு ஆக்சிஜன், மருந்துகள் கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகின்றனர். ஏழை மக்களுக்கு மருந்துகள் கிடைக்க வேண்டும், மக்களை காப்பாற்றுங்கள் என்று காந்தி சிலையிடம் பேசி முறையிட்டார்.
பின்னர் தகவலறிந்து வந்த சேலம் மாநகர டவுன் காவல் துறையினர் ஊரடங்கு நேரத்தில் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். கொரோனா பாதிப்பால் நண்பர் உயிரிழந்த துக்கம் தாங்கமுடியாமல் காந்தி சிலைக்கு வந்த நபர் உண்ணாவிரத்தில் ஈடுபட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu