குறை தெரிவிக்க போன்நெம்பர் எழுதப்பட்டுள்ளதா? மாநகராட்சி கமிஷனர் ஆய்வு

குறை தெரிவிக்க போன்நெம்பர் எழுதப்பட்டுள்ளதா? மாநகராட்சி கமிஷனர் ஆய்வு
X

சேலம், தொங்கும் பூங்கா கட்டிடம் சுவரில் எழுதப்பட்டிருக்கும் அலுவலர்களின் தொலைபேசி எண்கள் நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ்.

சேலத்தில், பொதுமக்கள் குறை தெரிவிக்க அலுவலர் தொலைபேசி எண்கள் எழுத்தப்பட்டுள்ளதை மாநகராட்சி கமிஷனர் நேரில் ஆய்வு செய்தார்.

சேலம் மாநகராட்சியில் பொதுமக்கள் தங்களின் குறைகளை தெரிவிக்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அவ்வகையில், நான்கு மண்டலங்கள் வாரியாக மற்றும் கோட்டங்கள் வாரியாக பணிபுரியும் அலுவலர்களின் தொலைபேசி எண்களை, 60 கோட்டங்களிலும் முக்கியமான சாலை சுவர்களிலும், தொலைபேசி எண்கள் எழுதும் பணிகள் நடைபெற்று வருகிறது.

சேலம் அஸ்தம்பட்டி மண்டலம் தொங்கும் பூங்கா கட்டிடம் சுவரில், அலுவலர்களின் தொலைபேசி எண்கள் எழுதப்பட்டு உள்ளதை மாநகராட்சி ஆணையாளர் கிரிஸ்துராஜ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Tags

Next Story
குளிர்காலத்தில் உங்க மூக்கு ரொம்ப அடைச்சு மூச்சு விட சிரமமாக இருக்கா..? அப்போ இதை குடிச்சு பாருங்க..!