சேலம் மாநகராட்சி பகுதிகளில் ஆணையாளர் கிறிஸ்துராஜ் ஆய்வு

சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் ஆய்வு மேற்கொண்டார்.

சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில், மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் ஆய்வு மேற்கொண்டார். அஸ்தம்பட்டி மண்டலத்திற்குட்பட்ட வின்சென்ட் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமினை ஆய்வு செய்தார்.

அதை தொடர்ந்து, மணக்காடு காமராஜர் மகளிர் மேல்நிலைப் பள்ளி, அம்மாப்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட பாவடி பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகம், அம்மாப்பேட்டை மண்டல அலுவலக வளாகத்தில் அண்ணா மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு செய்தார்.

அம்மாப்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட கோட்டம் எண்.40ல் அய்யாசாமி பசுமை வெளிப்பூங்கா வளாகத்திற்குச் சென்ற ஆணையாளர், அங்கு நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சி மேற்கொண்டிருந்த பொதுமக்களிடம் பூங்கா வளாகத்தில் நடைபயிற்சி மேற்கொள்வதற்கு தேவையான வசதிகள் எவ்வாறு உள்ளது என்று ஆணையாளர் கிறிஸ்துராஜ் கேட்டறிந்தார்.

தொடர்ந்து அப்பகுதியை சார்ந்த பொதுமக்கள் இறகுப்பந்து விளையாடி கொண்டிருந்தனர். அங்கு சென்ற ஆணையாளர் அவர்கள் அவர்களுடன் சேர்ந்து இறகுப்பந்து விளையாடினார். பின்னர், அம்மாப்பேட்டை மண்டல அலுவலகத்திற்கு சென்ற ஆணையாளர் அவர்கள் மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படும் சுகாதாரப் பணிகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து மண்டல உதவி ஆணையாளருடன் ஆலோசனை மேற்கொண்டார்.

Tags

Next Story
ai automation in agriculture