சேலம் மாவட்டத்தில் 56 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு

சேலம் மாவட்டத்தில்  56 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு
X

சேலம் அரசு மருத்துவமனை (பைல் படம்)

சேலம் மாவட்டத்தில் 56 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதார பணிகள் துணை இயக்குனர் தெரிவித்தார்.

சேலம் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனோ பாதிப்பு அதிகரித்து வரும் சூழ்நிலையில் தற்போது சேலம் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய் தொற்றால் இதுவரை 56 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் சேலத்தை சேர்ந்த 39 பேர் மற்றும் பிற மாவட்டங்களைச் சேர்ந்த 17 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் தோற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.இது குறித்து சேலம் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் சுப்பிரமணியம் கூறும்போது,

கடந்த 17ம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை 48 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் அதில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 37 பேர் பிற மாவட்டங்களில் 11 பேர் ஆகும், அதே போல் தனியார் மருத்துவமனைகளில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 8 பேர் பிற மாவட்டங்களை சேர்ந்த ஆறு பேருக்கு கருப்பு பூஞ்சை உறுதிபடுத்தப்பட்டுள்ளது அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்