சேலம் அம்மாபேட்டை முருகன்கோயில் கட்டுமானப்பணிகள்:மாவட்ட ஆட்சியர்ஆய்வு

சேலம் அம்மாபேட்டை முருகன்கோயில் கட்டுமானப்பணிகள்:மாவட்ட ஆட்சியர்ஆய்வு
X
திருக்கோயில் கட்டுமான பணிகளை அடிவாரம் பகுதியில் இருந்து நடந்து சென்று ஆட்சியர் ஆய்வு மேற்கொண் டார்

சேலம் அம்மாபேட்டை சேலம் அம்மாபேட்டை அருள்மிகு குமரகிரி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் கட்டுமான பணிகளை ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

சேலம் அம்மாபேட்டை பகுதியில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு குமரகிரி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோயில் கோபுரம் மற்றும் சாலை உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள கடந்த ஆட்சியில் 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த நிலையில், இன்று சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் திருக்கோயிலில் நாடைபெறும் பணிகளை ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது மலையடிவாரத்திலிருந்து அதிகாரிகளுடன் மலை உச்சிக்கு நடந்துசென்று கோபுரம் அமைக்கும் பணி மற்றும் வியூ பாயின்ட், பொதுமக்கள் தங்கும் இடம் உள்ளிட்ட கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார். மேலும், பணிகளை விரைந்து முடித்திட அதிகாரிகளிடம் கூறினார். இந்த ஆய்வில் இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள் கோயில் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு