சேலம் தெற்கு வட்டாட்சியரை மாற்றக்கோரி வருவாய்த்துறை அலுவலர்கள் தர்ணா

சேலம் தெற்கு வட்டாட்சியரை மாற்றக்கோரி வருவாய்த்துறை அலுவலர்கள் தர்ணா
X

சேலம் தெற்கு வட்டாட்சியர் சீனிவாசன் இடமாற்றம் செய்ய வலியுறுத்தி வருவாய்த்துறைய அலுவலர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் தெற்கு வட்டாட்சியரை பணி இடமாற்றம் செய்ய கோரி, வருவாய்த்துறை அலுவலர்கள் பணியை புறக்கணித்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

சேலம் தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் பணியாற்றக்கூடிய வட்டாட்சியர் சீனிவாசன் அங்கு பணியாற்றக்கூடிய அலுவலருக்கு எதிரான விரோத போக்கை கையாண்ட்டு வருவதாக குற்றச்சாட்டு உள்ளது. குறிப்பாக, வார விடுமுறை தராமல் தொடர்ந்து பணி செய்ய வற்புறுத்தல், பெண் அலுவலர்களை அதிக நேரம் பணி செய்ய வற்புறுத்தல், ஊழியர்களின் பணி பதிவேட்டில் திருத்தம் செய்தல் உள்ளிட்ட வருவாய் துறை அலுவலர் விரோத போக்கை கடைபிடிப்பதாகக்கூறப்படுகிறது.

இதையடுத்து, சேலம் மாவட்ட வருவாய் துறை அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் அர்த்தனாரி தலைமையில், ஊழியர்கள் பணியை புறக்கணித்து, தெற்கு வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து வட்டாட்சியர் சீனிவாசனை இடமாற்றம் செய்யக்கோரி தர்ணாவில் ஈடுபட்டனர்.

வருவாய்த் துறை ஊழியர் சங்க சேலம் மாவட்ட தலைவர் அர்த்தனாரி கூறுகையில், அலுவலகத்தில் தனக்கென இடைத்தரகர் நியமித்துக் கொண்டு வட்டாச்சியர் சீனிவாசன் கோப்புகளை கையாண்டு வருகிறார். கிராம நிர்வாக அலுவலர்களின் பணி பதிவேடுகளில் குறைபாடு இருப்பதாக வேண்டுமென்றே குறை கூறி வருவதுடன், அலுவலர்கள் இடையே மன உளைச்சலை ஏற்படுத்துவதாகக்கூறினார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்