விதிமீறிய கட்சிகள் மீது வழக்குப்பதிவு

விதிமீறிய கட்சிகள் மீது வழக்குப்பதிவு
X

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6 ம் தேதி நடத்தப்படுகிறது. இதற்கான அறிவிப்பை கடந்த 26 ம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அறிவிப்பு வெளியானவுடன் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு கொண்டு வரப்பட்டது. தேர்தல் விதிமீறல்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் போலீசில் தனியாக தேர்தல் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இத்தனிப்பிரிவு தேர்தல் விதிமீறல் தொடர்பான புகார்களை பரிசீலித்தும், விசாரணை நடத்தியும் வழக்கு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன்படி சேலம் மாவட்டத்தில் எஸ்பி அலுவலகத்தில் தேர்தல் பிரிவு இயங்கி வருகிறது. ஒவ்வொரு காவல்நிலைய பகுதியிலும் நடக்கும் விதிமீறல் சம்பவங்களை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி வருகின்றனர்.

இந்த வகையில் சேலம் மாவட்டத்தில் சுவர் விளம்பரத்தை அழிக்காமல் வைத்திருத்தல், கொடிக்கம்பம் அகற்றாதது, அனுமதியின்றி கட்சி கூட்டங்களை நடத்தியது, விதிமீறி அதிகப்படியான கொடிகளுடன் பேரணியாக சென்றது போன்ற சம்பவங்களின் மீது வழக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதிமுக, அமமுக, பாமக, பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சியினர் மீதும் இதுவரை 58 வழக்குகளை போலீசார் பதிவு செய்துள்ளனர். இதில் சில விதிமீறல்களுக்கு கட்சி நிர்வாகிகளை போலீசார் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!