காலில் விழுந்து கதறிய பெண்கள்: பதறிய கலெக்டர்- காரணம் இதுதான்

தூய்மையான குடிநீர் கேட்டு, சேலம் மாவட்ட ஆட்சியரின் காலில் விழுந்து பெண்கள் கதறி அழுததால், அங்கு பரபரப்பு நிலவியது.

சேலம் எருமாபாளையம் பகுதியில் தனியார் நூற்பாலை உள்ளது. இந்த ஆலைகளில் இருந்து வெளியேற்றப்படும் சாயக்கழிவு காரணமாக, அப்பகுதியில் குடிநீர் மாசடைந்து, பல நபர்கள் நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். சம்மந்தப்பட்ட ஆலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, அப்பகுதியை சேர்ந்த பெண்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், எருமாபாளையம் பகுதியை சேர்ந்த பெண்கள் பலர், மாசடைந்த குடிநீருடன், இன்று சேலம் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது அங்கு வந்த ஆட்சியர் கார்மேகம் காலில், பெண்கள் அனைவரும் விழுந்து கண்ணீருடன் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

குடிநீரை ஏற்படுத்தும் ஆலை மீது உரிய நடவடிக்கை எடுத்து, தங்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனர். தூய்மையான குடிநீர் கிடைக்க வலியுறுத்தி பெண்கள் ஆட்சியர் காலில் விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story