/* */

சீருடைப் பணியாளர் தேர்வில் இட ஒதுக்கீடு: சிலம்பாட்ட கழகத் தலைவர் வலியுறுத்தல்

சீருடைப் பணியாளர் தேர்வில் வீரர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க சிலம்பாட்ட தலைவர் வலியுறுத்தியுள்ளாா்.

HIGHLIGHTS

சீருடைப் பணியாளர் தேர்வில் இட ஒதுக்கீடு: சிலம்பாட்ட கழகத் தலைவர் வலியுறுத்தல்
X

சேலம் அம்மாபேட்டையில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற 39 வது தமிழ்நாடு மாநில ஜூனியர் சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டி.

தமிழ்நாடு சிலம்பாட்டக் கழகம் மற்றும் சேலம் மாவட்ட சிலம்பாட்ட கழகம் சார்பில் 39 ஆவது தமிழ்நாடு மாநில ஜூனியர் சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டி அம்மாபேட்டையில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்றது.

இந்திய சிலம்பம் சம்மேளனம் மற்றும் தமிழ்நாடு சிலம்பாட்டக் கழகத்தின் தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த போட்டியை சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் துவக்கி வைத்தார்.

இதில் சேலம், திருச்சி, மதுரை, கோவை, சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் 11 வயது முதல் 14 வயது வரையிலான 600 மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை திறன்பட வெளிப்படுத்தினர். போட்டியானது ஏழு எடைப்பிரிவுகளாக நாக்-அவுட் முறையில் நடந்தது. இதில் தனித்திறமை மற்றும் நேரடி போட்டி முறையில் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

இதனிடையே செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த இந்திய சிலம்பம் சம்மேளனம் மற்றும் தமிழ்நாடு சிலம்பாட்டக் கழகத்தின் தலைவர் ராஜேந்திரன், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் உள்ள விளையாட்டுத்துறைக்கான 3% இட ஒதுக்கீட்டில் சிலம்பத்தையும் சேர்த்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தார்.

மேலும் தமிழக சீருடை பணியாளர் தேர்வில் சிலம்பாட்ட வீரர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Updated On: 19 Sep 2021 7:00 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    இளையராஜா பாடிய முதல் பாடலே ட்ரெண்ட் செட்டானது... எப்படி?
  2. தமிழ்நாடு
    ஓய்வூதிய பலன்கள் கிடைப்பதை உறுதி செய்ய அரசு அறிவுறுத்தல்..!
  3. அரசியல்
    நரேந்திரமோடி- வாஜ்பாய் ஒற்றுமைகள் என்ன?
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. நாமக்கல்
    சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் கோயில்களில் சிறப்பு அபிஷேகம்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. நாமக்கல்
    ப.வேலூர் டவுன் பஞ்சாயத்து சார்பில் பொதுமக்களுக்கு தண்ணீர் பந்தல்...
  8. நாமக்கல்
    கூட்டுறவு சங்கத்தில் ரூ.1.17 கோடி மோசடி: செயலாளர் உட்பட 2 பேர் கைது
  9. குமாரபாளையம்
    குமாரபாளையம் விநாயகர், பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
  10. ஈரோடு
    கொளுத்தும் கோடை வெயில்: ஈரோட்டில் நேற்று 108.32 டிகிரி வெயில் பதிவு