சேலத்தில் பப்ஜி மதனின் மனைவி, குடும்பத்தாரிடம் போலீஸ் தீவிர விசாரணை

சேலத்தில் பப்ஜி மதனின் மனைவி, குடும்பத்தாரிடம் போலீஸ் தீவிர விசாரணை
X

சேலத்தில் உள்ள பப்ஜி மதன் வீடு

யூ டியூபில் பெண்கள் குறித்து ஆபாசமாக பேசிய வழக்கில் பப்ஜி மதன் தேடப்பட்டு வரும் நிலையில், சேலத்தில் அவரது மனைவி, குடும்பத்தாரிடம் காவல்துறையினர் இரண்டு மணி நேரம் விசாரணை நடத்தினர்.

இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள பப்ஜி விளையாட்டின் மூலமாக லைவ் சாட்டிங்கில் ஆபாசமாக பேசுவது, பெண்களை இழிவுபடுத்தி பேசுவது, சிறுமிகளிடம் பேசிய ஆபாச ஆடியோ உள்ளிட்டவைகளை, மதன் என்பவர் தனது யூ டியூப் சேனலில் வெளியிட்டு வந்தார்.

மதன் மீது சமூக ஆர்வலர் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில், யூடியுப் கேம் மதன் குறித்து தற்போது சென்னை புளியந்தோப்பு சைபர் கிரைம் பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து மதனை தேடி வருகிறார்கள். தொடர்ந்து மதன் தலைமறைவாக இருந்து வருகிறார். தேடப்படும் மதன், சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதால் சென்னை தனிப்படை காவல்துறையினர் சேலம் விரைந்து தொடர் விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில், மதன் சேலம் தாதகாப்பட்டி சீரங்கன் புதுதெருவை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, அவரது வீட்டுக்கு சென்று சோதனை செய்தபோது மதன் வீட்டில் இல்லாமல் தலைமறைவாக உள்ளது தெரியவந்தது. பின்னர் அவரது மனைவி கீர்த்திகா மற்றும் அவரது குடும்பத்தாரிடம் விசாரணை நடத்தினர்.

சுமார் 2 மணி நேரம் விசாரணைக்கு பிறகு.மதன் குறித்து தகவல் ஏதுவும் தெரிவிக்காததால் மதனின் மனைவி கீர்த்திகாவை சென்னைக்கு அழைத்து சென்று விசாரிக்க முடிவு செய்து சென்னைக்கு அழைத்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. யூடியூப் கேப் மதனின் நண்பர்கள் சிலர் சேலத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் யார் யார் ?என தற்போது விசாரணை நடக்கிறது.விரைந்து யூடியூப் கேம் மதனை கைது செய்ய வேண்டும் என்ற முயற்சியில் தனிப்படை போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil