சேலத்தில் சமூக இடைவெளியை மறந்து சந்தையில் கூடியபொதுமக்கள்:தொற்று பரவும் அபாயம்

சேலத்தில் சமூக இடைவெளியை  மறந்து  சந்தையில் கூடியபொதுமக்கள்:தொற்று பரவும் அபாயம்
X

சேலத்தில் சமூக இடைவெளியை மறந்து சந்தையில் கூடியபொதுமக்கள்

சேலத்தில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க பொதுமக்கள் சமூக இடைவெளியை மறந்து சந்தையில் கூடியதால் நோய் தொற்று பரவும் அபாயம்.

தமிழக அரசு நாளை முதல் ஒருவாரத்திற்கு எவ்வித தளர்வும் இல்லாத முழு ஊரடங்கை அறிவித்துள்ளது. இதனை எதிர்கொள்ளும் வகையில் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்கிகொள்ள இன்று காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அனைத்து கடைகளையும் திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

அதனைத்தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து காய்கறி மளிகை இறைச்சி உள்ளிட்ட கடைகள் திறக்கப்பட்டுள்ளது. ஜவுளி, நகைக்கடைகளை காட்டிலும் காய்கறி மற்றும் இறைச்சி வாங்கி பொதுமக்கள் தீவிரம் காட்டினர்.

இதனால் காய்கறி சந்தை மற்றும் இறைச்சி விற்பனை கூடங்களில் காலை முதலே மக்கள் கூட்டம் அலைமோதியது. சமூக இடைவெளியை காற்றில் பறக்க விட்டு பொதுமக்கள் பொருட்களை வாங்குவதால் மேலும் நோய் தொற்று பரவும் சூழ்நிலையே ஏற்பட்டுள்ளது.

Tags

Next Story
ai marketing future