சேலத்தில் டீசல் திருடியதாக ஆட்டோ ஓட்டுநரை அரை நிர்வாணமாக்கி தாக்குதல்

சேலத்தில் டீசல் திருடியதாக ஆட்டோ ஓட்டுநரை அரை நிர்வாணமாக்கி தாக்குதல்
X

தாக்குதலுக்கு உள்ளான ஆட்டோ டிரைவர்.

சேலம் மணியனூர் பகுதியில் டீசல் திருடியதாக ஓட்டுநரை அரை நிர்வாணமாக அமரவைத்து தாக்கும் காட்சி சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.

சேலம் மணியனூர் அருகே உள்ள குமரகவுண்டர்தெரு பகுதியை சேர்ந்த பீரித்தி என்ற ஆட்டோ ஓட்டுனரை அரை நிர்வாணமாக அமரவைத்து சிலர் கயிற்றால் தாக்குவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

இது தொடர்பாக சேலம் அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் விசாரித்தபோது, சேலம் அன்னதானபட்டி பகுதியை சேர்ந்த ஜெகதீஸ் என்பவரின் மினி ஆட்டோவின் ஓட்டுனராக கடந்த 7 ஆண்டுகளாக பீரித்தி பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக 30 லிட்டர் டீசலை பிரித்தி திருடி விற்பனை செய்ததாக கூறப்படுகிறது.

இதனையறிந்த மினி ஆட்டோ உரிமையாளர் ஜெகதீஷ் மற்றும் அவரது நண்பர்கள் ஹரி, விஜய் ஆகிய மூவரும் மதுபோதையில் கடந்த மூன்றாம் தேதி மணியனூரில் உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று கயிற்றால் கடுமையாக தாக்கியுள்ளனர். இது தொடர்பாக கடந்த 4ஆம் தேதி சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக ஓட்டுனர் பீரித்தி அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது மினி ஆட்டோ உரிமையாளர் உட்பட 3 பேர் தாக்கியதாக புகார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் புகாரளித்த நிலையில், வழக்குபதிவு செய்து விசாரித்தபோது இருதரப்பினரும் சமாதானமாக செல்வதாக தெரிவித்ததையடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!