சேலத்தில் கோகுலாஷ்டமி முன்னிட்டு கிருஷ்ணருக்கு தங்க கவசம், சிறப்பு பூஜை

சேலத்தில் கோகுலாஷ்டமி முன்னிட்டு  கிருஷ்ணருக்கு தங்க கவசம், சிறப்பு பூஜை
X

சேலம் செவ்வாய்ப்பேட்டை பாண்டு ரங்கநாதர் திருக்கோவிலில் தங்க கவச சிறப்பு அலங்காரத்தில் கிருஷ்ணர்.

சேலம் செவ்வாய்ப்பேட்டை பாண்டு ரங்கநாதர் கோயிலில் கோகுலாஷ்டமி முன்னிட்டு கிருஷ்ணருக்கு தங்க கவசம் சாத்தப்பட்டது.

கோகுலாஷ்டமி தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் கிருஷ்ணர் திருக்கோவில் மட்டுமல்லாது, வீடுகளிலும் கிருஷ்ண ஜெயந்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக சேலம் செவ்வாய்ப்பேட்டை பாண்டு ரங்கநாதர் திருக்கோவிலில் இன்று கோகுலாஷ்டமி வைபவம் நடைபெற்றது. கிருஷ்ணருக்கு அதிகாலை முதல் பால் இளநீர் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு கோகுலக்கண்ணன் கிருஷ்ணருக்கு தங்க கவசம் சாத்தப்பட்டது.

தொடர்ந்து கிருஷ்ணருக்கு பல்வேறு விதமான வாசனை மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பட்டாச்சாரியார் வேதங்கள் முழங்க சிறப்பு அர்ச்சனை நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கோகுலாஷ்டமி வைபவத்தை காண அப்பகுதியில் இருந்து ஏராளமான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!