8 வயது காமாட்சிஸ்ரீ தனுராசனத்தில் 500 மீட்டரை கடந்து உலக சாதனை

8 வயது காமாட்சிஸ்ரீ தனுராசனத்தில் 500 மீட்டரை கடந்து உலக சாதனை
X

தனுராசனம் செய்யும் சிறுமி காமாட்சிஸ்ரீ.

தனுராசனத்தில் உடலை வில்போல் வளைத்து பின்பக்கமாக உருண்டு சென்று 500 மீட்டரை கடந்து உலக சாதனை புரிந்த 8 வயது சிறுமி.

தனுராசனத்தில் உடலை வில்போல் வளைத்து பின்பக்கமாக உருண்டு சென்று 500 மீட்டரை கடந்து உலக சாதனை புரிந்த 8 வயது சிறுமி.

சேலம் மணியனூர் பகுதியை சேர்ந்தவர் பருப்பு மில் உரிமையாள் சசிக்குமார். 8வயது கொண்ட இவரது மகள் காமாட்சிஸ்ரீ, அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வருகிறார். யோகாசனம் கற்றுக்கொள்ளும் ஆர்வம் கொண்ட காமாட்சிஸ்ரீ கடந்த ஒருவருடமாக விஷ்ணுபைரவன் என்பவரிடம் யோகாசனம் பயின்று வருகிறார்.

இந்தநிலையில் யோகாசனத்தில் உலக சாதனை படைக்க வேண்டும் என்பதற்காக, தனுராஷ்னத்தில் தனது சாதனை நிகழ்ச்சியை அரங்கேற்றி உள்ளார்.

குப்புற படுத்து சுவாசத்தை வெளியே விட்ட நிலையில் கைகளால் கால்களை மேல்நோக்கி இழுத்து பிடித்து, தலையையும் கழுத்தையும் மேலே தூக்கி வளைத்து செய்யப்படும் இந்த சாதனை நிகழ்ச்சி சேலம் அகரம் காலனி தெருவில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியை மாநகர காவல் உதவி ஆணையர் ஆனந்த்குமார் தொடங்கி வைத்தார். காமாட்சிஸ்ரீ தனது உடலை வில்போல் வளைத்து பின்பக்கமாக உருண்டு சென்று (back bend rolling) அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். 30 நிமிடத்தில், 800 முறை உருண்டு 500 மீட்டர் தொலைவைக் கடந்துள்ளார். இவரது இந்த முயற்சியை நோபல் புக் ஆப் ரெக்கார்ட் என்ற நிறுவனம் உலக சாதனையாக அங்கீகரித்து அதற்கான சான்றிதழை வழங்கியுள்ளது.



Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!