விநாயகர் சதுர்த்தி 10ம் நாள்: சேலம் ராஜ கணபதி கோவிலில் 1000லி பால் அபிஷேகம்

விநாயகர் சதுர்த்தி 10ம் நாள்: சேலம் ராஜ கணபதி கோவிலில் 1000லி பால் அபிஷேகம்
X

சேலம் ஸ்ரீ ராஜ கணபதி திருக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி பத்தாவது நிறைவு நாளை முன்னிட்டு ஆயிரம் லிட்டர் பால் அபிஷேகம் விமர்சியாக நடைபெற்றது.

சேலம் ஸ்ரீ ராஜ கணபதி கோவிலில் விநாயகர் சதுர்த்தி 10வது நிறைவு நாளை முன்னிட்டு 1000 லிட்டர் பால் அபிஷேகம் நடைபெற்றது.

சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ராஜகணபதி திருக்கோயிலில் விநாயகர் சதுர்த்தி தொடங்கிய நாள் முதல் பல்வேறு விதமான பூஜைகள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. 10வது நாள் நிறைவு நாளான இன்று சிறப்பு ஆராதனை மற்றும் சிறப்பு ஆயிரம் லிட்டர் பால் அபிஷேகம் வைபவம் இன்று நடைபெற்றது.

அதிகாலை முதல் விநாயக பெருமானுக்கு சிறப்பு யாகங்கள் செய்யப்பட்டது. இதனைதொடர்ந்து இளநீர், சந்தனம்,தயிர், பஞ்சாமிருதம், விபூதி சொர்ணா அபிஷேகம் என பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் விநாயக பெருமானுக்கு பத்தாவது நாளில் ஆயிரம் லிட்டர் பால் அபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து விநாயகருக்கு பட்டாடை உடுத்தி பல்வேறு வாசனை மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு குருக்களால் வேதங்கள் முழங்க லட்சார்ச்சனை நடைபெற்றது.

தொடர்ந்து, பல்வேறு வாசனை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட விநாயகப்பெருமானுக்கு மேளதாளம் முழங்க மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த வைபவத்தில் ஏராளமான பக்தர்கள் விநாயக பெருமானை வழிபட்டு சென்றனர்.

Tags

Next Story
why is ai important to the future