பூ மார்க்கெட் வியாபாரத்தை சேலம் எம்பி தடுப்பதாக வியாபாரிகள் புகார்

பூ மார்க்கெட் வியாபாரத்தை சேலம் எம்பி தடுப்பதாக வியாபாரிகள் புகார்
X

சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்திபன், பூ வியாபாரத்தை தடுப்பதாகக்கூறி மார்க்கெட்டில் கூடிய பூ வியாபாரிகள்.

சேலம் பூ மார்க்கெட் திறந்து வியாபாரம் செய்யவிடாமல், நாடாளுமன்ற உறுப்பினர் தடுப்பதாக வியாபாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக, தமிழக அரசு கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. பாதிப்பு படிப்படியாக குறையத் துவங்கிய பின்னர், காய்கறி மார்க்கெட், பூ மார்க்கெட் உள்ளிட்டவைகளை திறக்க அனுமதி அளித்து பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டன.

சேலம் பழைய பேருந்து நிலையத்தில் இயங்கி வரும் வ.உ.சி மார்க்கெட்டில் 174 பூக்கடைகள் இயங்கி வருகிறது. மாநகராட்சி நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. எனினும், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் ஆய்வு செய்வதாக கூறிக்கொண்டு, இதை தடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பூ மார்க்கெட் கடைகளில் உள்ள பெயர் பலகைகள் மற்றும் பில் புத்தகங்கள், எடைத்தராசு உள்ளிட்ட பொருட்களை வைக்கும் பெட்டிகளை அகற்ற வேண்டும் போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளை கூறி, கடைகளை, எம்.பி. திறக்கவிடாமல் தடுப்பதாக வியாபாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வ.உ.சி பூ மார்க்கெட் வியாபாரிகள், மார்க்கெட்டில் திரண்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். ஒரேநாளில் 50 லட்சம் வரை வியாபாரம் பாதிக்கப்படுவதாக வேதனை தெரிவித்துள்ள அவர்கள், இப்பிரச்சனைக்கு அரசு உரிய தீர்வு காண வேண்டுமென்று வலியுறுத்தினர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!