சேலத்தில் மளிகை குடோனில் தீ - 15 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்
சேலம் அம்மாபேட்டையில் மளிகை குடோன் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன.
சேலம் சின்னதிருப்பதி பகுதியை சேர்ந்த பெருமாள் என்பவருக்கு சொந்தமான மளிகை குடோன், பொன்னம்மாபேட்டை பகுதியில் உள்ளது. இன்று அதிகாலை இந்த குடோனில் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் செவ்வாய்பேட்டை தீயணைப்பு துறையினர் மற்றும் அம்மாபேட்டை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் நிகழ்விடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு தீயை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் இந்த தீ விபத்தில் சுமார் 15 லட்சம் மதிப்பிலான மளிகை பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின.
இது குறித்து அம்மாபேட்டை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் தெரிவிக்கின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu