சேலம் மாநகராட்சியில் இன்று காய்ச்சல் கண்டறியும் முகாம் நடைபெறும் இடங்கள்
சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் இன்று காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை பெரிய மோட்டூர், கார்கானா தெரு, திருவாக்கவுண்டனூர் சினிவாசா காலனி,கபினி தெரு, காட்டூர், ஏற்காடு மெயின்ரோடு, எல்.ஐ.சி. பணியாளர் காலனி, வைத்தி நகர், ரெயில்வே வடக்குத் தெரு, பழைய மார்கெட் தெரு, கார்பெட் தெரு, பெரிய கிணறு,ஆற்றோரம் தெற்குத் தெரு, திருவேங்கடம் தெரு, வள்ளுவர் நகர், குமரன் நகர் ஆகிய பகுதிகளில் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளன.
அதேபோல், பிற்பகல் 12.00 முதல் 2.00 மணி வரை வன்னியர் நகர், அந்தோணிபுரம், மாரியம்மன் கோவில் தெரு, கோரிக்காடு, மாரிமுத்துக் கவுண்டர் தெரு, பாரதிநகர்,சுப்ரமணியநகர் எக்ஸ்டன்சன், நாராயணன் தெரு, பென்னடம் ராமசாமி தெரு, காந்தி மகான் தெரு, சுந்தர கணபதி தெரு, டி.வி.கே.ரோடு, அம்பலவாண சுவாமி கோவில் தெரு, கண்ணகி தெரு, அசோக் நகர், சிவசக்தி நகர் ஆகிய பகுதிகளிலும் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடைபெறும்.
மேலும், நண்பகல் 3.00 மணி முதல் 5.00 மணி வரை ஜாகீர் அம்மாப்பளையம் காளியம்மன் கோவில் தெரு, கபிலர் தெரு, டி.எம்.ரோடு, ரத்தினசாமிபுரம், சரஸ்வதி நகர்,மரவனேரி காந்தி நகர், சின்ன புதுார், சின்னசாமி தெரு, முராரி வரதய்யர் தெரு, ராஜகோபால் லே அவுட், அண்ணாமலை தெரு, குறிஞ்சி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் என 48 இடங்களில் இந்த சிறப்பு காய்ச்சல் முகாம் நடைபெறும் என்று, சேலம் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu