சேலம் மாநகராட்சியில் இன்று 48 இடங்களில் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம்கள்
சேலம் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ்
சேலம் மாநகராட்சியில் கொரோனா நோய்த்தொற்று பரவல் தடுப்பு பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநகராட்சிப் பகுதிகளில் நோய்த்தொற்று அறிகுறி உள்ளவர்களை வீடு வீடாகச் சென்று கண்டறிந்து அவர்களுக்கு தேவையான சிகிச்சைகளை வழங்கும் வகையில் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாதிப்பு கண்டறியப்பட்ட பகுதிகளில் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு அப்பகுதியில் உள்ள அனைவரும் பரிசோதிக்கப்பட்டு வருகின்றனர்.
அவ்வகையில், சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் இன்று காலை 9.00 மணி முதல் 11.00 மணி வரை இஞ்ஜினியர்ஸ் காலனி, ஸ்டேட் பேங்க் காலனி, லட்சுமி நகர், அபிராமி நகர், பாண்டியன் தெரு, அன்னை இந்திரா நகர், நள்ளான்காடு, மேட்டு ஆண்டாள் தெரு, கிருஷ்ணன் கோவில் தெரு, 2வது அக்ரஹாரம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், பிற்பகல் 12.00 முதல் 2.00 மணி வரை நகரமலை அடிவாரம், தர்ம நகர், மெய்யன் தெரு, பள்ளப்பட்டி இரத்தினம் தெரு, குமரன் நகர், பிரகாசம் நகர், ராமகிருஷ்ணா ரோடு, செவ்வாய்பேட்டை அப்புச்செட்டி தெரு, என்.ஜி.ஜி.ஓ காலனி, சுப்பிரமணிய தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முகாம்கள் நடைபெறும்.
அதேபோல், நண்பகல் 3.00 மணி முதல் 5.00 மணி வரை அண்ணா நகர், கபிலர் தெரு, புத்தர் தெரு, சின்னப்பன் தெரு, ராம் நகர், கே.எ.எஸ். நகர், நாராயணபிள்ளை தெரு, ஜலால்கான் தெரு, தில்லை நகர், ஹவுசிங் போர்டு குறிஞ்சி நகர், அருணாச்சலம் தெரு, பாவடி தெரு, சித்தர் தெரு, உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் என 48 இடங்களில் இந்த சிறப்பு காய்ச்சல் முகாம் நடைபெறும் என்று மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu