சேலம் மாநகராட்சியில் நாளை காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம்கள்!

சேலம் மாநகராட்சியில் நாளை காய்ச்சல் கண்டறியும் சிறப்பு  முகாம்கள்!
X
சேலம் மாநகராட்சி பகுதிகளில், நாளை 50க்கும் மேற்பட்ட இடங்களில் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறும் என்று, மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சேலம் மாநகராட்சியில் கொரோனோ நோய்த்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள், தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநகராட்சி பகுதிகளில் நோய்த்தொற்று அறிகுறி உள்ளவர்களை, வீடு வீடாகச் சென்று கண்டறிந்து, அவர்களுக்கு தேவையான சிகிச்சைகளை வழங்கும் வகையில் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பாதிப்பு கண்டறியப்பட்ட பகுதிகளில் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு அப்பகுதியில் உள்ள அனைவரும் பரிசோதிக்கப்பட்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் மாநகராட்சி பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல், 12 மணி வரை மாமாங்கம், வி எம் ஆர் நகர், பெரியார் நகர், தெற்கு அழகாபுரம், கோரிமேடு, இந்திரா நகர் கோவில் தெரு, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முகாம் நடக்கிறது.

பிற்பகல் 12 முதல் 2 மணி வரை கல்யாண சுந்தரம் காலனி, அப்பாவும் நகர், மெயின் தெரு, பெரிய கிணறு தெரு, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடைபெறும். நண்பகல் 3 மணி முதல் 5 மணி வரை முகில் நகர், சுப்பிரமணிய நகர் அங்காளம்மன் கோவில் தெரு, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் சிறப்பு காய்ச்சல் முகாம் நடைபெறும்.

இவ்வாறு, 50 க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெறும் சிறப்பு மருத்துவ முகாம்களை பொதுமக்கள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags

Next Story