சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் இன்று காய்ச்சல் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்கள்

சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் இன்று  காய்ச்சல் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்கள்
X
சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் இன்று காய்ச்சல் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்கள் .

சேலம் மாநகராட்சியில் கொரோனா நோய் தொற்று பரவல் தடுப்பு பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநகராட்சிப் பகுதிகளில் நோய் தொற்று அறிகுறி உள்ளவர்களை வீடு வீடாகச் சென்று கண்டறிந்து அவர்களுக்கு தேவையான சிகிச்சைகளை வழங்கும் வகையில் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாதிப்பு கண்டறியப்பட்ட பகுதிகளில் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு அப்பகுதியில் உள்ள அனைவரும் பரிசோதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் மாநகராட்சிப் பகுதிகளில் இன்று காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை அண்ணா நகர், வன்னியர் நகர், சொட்டையன் தெரு, விநாயகா கார்டன், காட்டு பிள்ளையார் நகர், சின்னக்கொல்லப்பட்டி, உமா நகர், செவ்வாய்பேட்டை ஜம்புலிங்க மூர்த்தி தெரு, இரயில்வே வடக்கு தெரு, ஜலால்புறா, ஜோதி மெயின் ரோடு,உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், பிற்பகல் 12.00 முதல் 2.00 மணி வரை ஏரிக்கரை ரோடு, ஆசாத் ரோடு, செவ்வாய்பேட்டை மலங்காட்டான் தெரு, சையத் அலி தெரு, கான்வென்ட் ரோடு, ஆத்துக்காடு, குமாரசாமிப்பட்டி ராஜா எக்ஸ்டன்சன், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடைபெறும்.

மேலும், நண்பகல் 3.00 மணி முதல் 5.00 மணி வரை ஜாகீர் அம்மாபாளையம் அண்ணா நகர், அரியாக்கவுண்டம்பட்டி லட்சுமி நகர், டி.எம் ரோடு, லாடக்குப்பம் தெரு,மெய்யனூர் ராம் நகர், பிள்ளையார் நகர், நாராயணாபிள்ளை தெரு, குண்டு போடும் தெரு,,உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் என 45க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சிறப்பு காய்ச்சல் முகாம் நடைபெறும் என்றும், சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம்களை, முகாம் நடைபெறும் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.


Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!