சேலத்தில் இன்று காய்ச்சல் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறும் இடங்கள்

சேலத்தில் இன்று  காய்ச்சல் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறும் இடங்கள்
X

சேலம் மாநகராட்சி அலுவலகம்

சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் இன்று காய்ச்சல் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறும் இடங்களை மாநகராட்சி ஆணையாளர் அறிவித்துள்ளார்

சேலம் மாநகராட்சியில் கொரோனா நோய் தொற்று பரவல் தடுப்பு பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநகராட்சிப் பகுதிகளில் நோய் தொற்று அறிகுறி உள்ளவர்களை வீடு வீடாகச் சென்று கண்டறிந்து அவர்களுக்கு தேவையான சிகிச்சைகளை வழங்கும் வகையில் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாதிப்பு கண்டறியப்பட்ட பகுதிகளில் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு அப்பகுதியில் உள்ள அனைவரும் பரிசோதிக்கப்பட்டு வருகின்றனர்.

அதன்படி, மாநகராட்சிப் பகுதிகளில் இன்று காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை காமநாயக்கன்பட்டி, அண்ணாபுரம், சொட்டையன் தெரு, கோரிக்காடு,காட்டூர், கோரிமேடு பெரியார் நகர், சங்கர் நகர், வாசக சாலை, அல்லிக்குட்டை, முகமதுபுறா, அங்காளம்மன் கோவில் தெரு, பசுபகுனநாதன் தெரு, சாமுண்டி தெரு, உள்ளிட்ட பகுதிகளிலும்,

பிற்பகல் 12.00 முதல் 2.00 மணி வரை ரெட்டியூர் வன்னியர் நகர், தர்ம நகர், அம்மன் நகர், சாமிநாதபுரம், பி.ஆர்.பி.நகர், திருநகர், காமராஜ் காலனி, செவ்வாய்ப்பேட்டை பைகார தெரு, சக்தி நகர், ஹவுசிங் போர்டு குறிஞ்சி நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடைபெறும்.

மேலும், நண்பகல் 3.00 மணி முதல் 5.00 மணி வரை ஜாகீர் அம்மாபாளையம் கண்ணகி தெரு, அரியாகவுண்டம்பட்டி லட்சுமி நகர், ராமலிங்க நகர், பாவேந்தர் தெரு, பேர்லேண்ட்ஸ், அண்ணா நகர், காளியப்ப செட்டி காலனி, அண்ணா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இந்த சிறப்பு காய்ச்சல் முகாம் நடைபெறும்.

சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம்களை, முகாம் நடைபெறும் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!