சேலம் மாநகரில் இன்று காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடக்கும் இடங்கள்

சேலம் மாநகரில் இன்று  காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடக்கும் இடங்கள்
X
சேலம் மாநகராட்சியில் இன்று காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம்கள் நடைபெறும் இடங்கள் விவரம் பின்வருமாறு:

சேலம் மாநகராட்சியில் கொரோனா நோய் தொற்று பரவல் தடுப்பு பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாதிப்பு கண்டறியப்பட்ட பகுதிகளில் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு அப்பகுதியில் உள்ள அனைவரும் பரிசோதிக்கப்பட்டு வருகின்றனர். இன்று முகாம் நடைபெறும் இடங்கள்:

காலை 10.00 மணி முதல் 12.00 மணி:

சின்ன மோட்டூர், சோளம்பள்ளம், முல்லை நகர், கபினி தெரு, நியூ பேர்லேண்ட்ஸ், என்.ஜி.ஜி.ஓ.காலனி, குள்ளர் தெரு, வைத்தி தெரு, புது காலனி, பெரியார் தெரு, பாலாஜி நகர், வையாபுரி தெரு, புலிகுத்தி தெரு, கே.பி.கரடு, தார்ப்பாய்க்காடு, மாரியம்மன் கோவில் தெரு ஆகிய பகுதிகள்.

பிற்பகல் 12.00 மணி முதல் 2.00 மணி:

கனரா பேங்க் காலனி, ஆசாத் நகர், சிவதாபுரம் மெயின்ரோடு, வசக்காட்டுக் காலனி, சக்தி நகர், திரு நகர், ராமகிருஷ்ணா ரோடு, அப்புசெட்டி தெரு, பெருமாள் கோவில் தெரு,நாராயண நகர் 3-வது கிராஸ், எல்லப்பன் தெரு, வித்யா நகர், சென்னப்பன் தெரு, புட்டா மிசின் ரோடு, சங்கர் பிளிம்ஸ் ரோடு, எஸ்.வி.ஆர்.காலனி.

நண்பகல் 3.00 மணி முதல் 5.00 மணி:

காளியம்மன் கோவில் தெரு,கொடிப்பள்ளம், ஆண்டிப்பட்டி, முல்லாக்காடு, சுவர்ணபுரி, சின்ன முனியப்பன் கோவில்,நாராயணன் பிள்ளை தெரு, கோட்டை அண்ணா நகர், தில்லை நகர், சுந்தரர் தெரு,மேட்டுத் தெரு, அம்மாபேட்டை அண்ணா தெரு, தம்மண்ணன் தெரு, ராஜா தெரு, தெற்கு முனியப்பன் கோவில் தெரு, சக்தி நகர் .

மாநகராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம்களை, பொதுமக்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags

Next Story