சேலத்தில் மழைநீர் வடிகால்கள் தூர்வாரும் பணி: அமைச்சர் கே.என்.நேரு துவக்கிவைப்பு
சேலம் வாய்க்கால் பட்டறை பகுதியில் 'நகருக்குள் வனம்' திட்டத்தை நாட்டு மரக்கன்றுகளை நட்டுவைத்து துவக்கி வைத்த அமைச்சர் கே.என் நேரு.
சேலம் மாநகராட்சி பகுதிகளில் 4 மண்டலங்களிலும் இயற்கை சூழலை மேம்படுத்த நகருக்குள் வனம் திட்டத்தின் மூலமாக மரங்கள் அதிகளவில் நடப்பட்டு வருகிறது. இத்திட்டத்தினை மேலும் விரிவுபடுத்தும் வகையில் சேலம் மாநகராட்சி பகுதிகளில் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நடவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக மாநகராட்சி நிர்வாகம் 81 இடங்களை தேர்வு செய்துள்ளது. இந்த திட்டத்தின் முதற்கட்டமாக சேலம் வாய்க்கால் பட்டறை பகுதியில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என் நேரு நாட்டு மரக்கன்றுகளை நட்டுவைத்து துவக்கி வைத்தார்.
இதனைத்தொடர்ந்து மக்களை தேடி மருத்துவத்தின் விரிவாக்க திட்டத்தை அமைச்சர் கே.என்.நேரு துவக்கி வைத்தார். ஏற்கனவே இத்திட்டம் சேலம் கிராம பகுதிகளில் மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ள நிலையில் தற்போதும் நகரப் பகுதிக்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் தமிழகம் முழுவதும் வடிகால்கள் தூர்வாரும் பணிகளை 5 நாட்களுக்கு மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக 120 பேரூராட்சிகளில் 997வாகனங்களை பயன்படுத்தி சுமார் ஒரு லட்சம் பணியாளர்கள் கொண்டு பணி நடைபெற உள்ளது. இத்திட்டத்தினையும் சேலத்தில் அமைச்சர் துவக்கி வைத்தார். இதன்பின்னர் சேலம் சீலாவரி ஏரி தூர்வாரும் பணிகளை அமைச்சர் துவக்கி வைத்து பணிகளை ஆய்வு செய்தார்.
இந்த நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்த்துராஜ், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu