திமுக மூத்த முன்னோடி மிசா ஏ.மாரியப்பன் காலமானார்

திமுக மூத்த முன்னோடி மிசா ஏ.மாரியப்பன் காலமானார்
X

சேலம் கிச்சிபாளையத்தை சேர்ந்தவர் மிசா ஏ.மாரியப்பன்( 96). ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட மூத்த திமுக முன்னோடியான இவர் சனிக்கிழமை காலமானார். இவர் சேலம் நகர திமுக செயலாளராக பதவி வகித்தவர். மேலும் முன்னாள் நகர் மன்ற உறுப்பினராகவும், சேலம் நகர கூட்டுறவு வங்கி இயக்குனராகவும் இருந்துள்ளார். அவரது உயிரிழப்பிற்கு மத்திய மாவட்ட திமுக செயலாளர் ராஜேந்திரன் எம்எல்ஏ இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும் சேலம் மாவட்டத்தை சேர்ந்த திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!