தேமுதிகவில் இருந்து விலகி 500க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் ஐக்கியம்

தேமுதிகவில் இருந்து விலகி  500க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் ஐக்கியம்
X
அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியதை அடுத்து சேலத்தில் தேமுதிகவினர் அதிமுகவில் இணைந்தனர்.

அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியதை அடுத்து சேலத்தில் தேமுதிகவினர் 500க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்.

தொகுதி உடன்பாடு ஏற்படாத காரணத்தால், அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியது. இதனையடுத்து இன்றைய தினம் சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியை சேர்ந்த தேமுதிகவினர் 500க்கும் மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து விலகினர். அதேபோல் திமுக, சமத்துவ மக்கள் கட்சியை சேர்ந்தவர்கள் என 100பேர் அக்கட்சிகளில் இருந்து விலகினர்.

இவர்கள் அனைவரும் தேமுதிக வட்ட கழக செயலாளர் கோபிநாத் தலைமையில், தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக மாணவரணி செயலாளருமான சக்திவேல் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். புதியதாக இணைந்தவர்களுக்கு எம்.எல்.ஏ சக்திவேல் சால்வை அணிவித்து வரவேற்றார்.

Tags

Next Story
ai in future agriculture