பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்
சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.
தமிழக முழுவதும் வருகின்ற 1ஆம் தேதி முதல் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கல்லூரிக்கு வரும் பேராசிரியர்கள், ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயமாக தடுப்பூசி போடப்பட வேண்டும் என அறிவுறுத்தி, அதன் அடிப்படையில் சேலம் மாவட்டம் முழுவதும் இன்று ஆசிரியர்களுக்கான சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் உரிய பாதுகாப்பு வசதிகளுடன் திறக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் மண்டல அளவிலான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மாநில தலைவர் கண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், அனைத்து மாணவர்களுக்கும் தடுப்பு ஊசி செலுத்தி அதை உறுதி செய்ய வேண்டும் என்றும், பள்ளி, கல்லூரிகளில் உரிய பாதுகாப்பு வசதிகளை ஏற்ப்படுத்தி தர வேண்டும், தனியார் கலை அறிவியல் கல்லூரிகளில் கல்வி கட்டணத்தை அரசு நிர்ணயம் செய்திட வேண்டும், அரசு மாணவர் விடுதிகளையும் உடனடியாக திறக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டன.
மேலும் பள்ளி கல்வித் துறையில் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை புகுத்தும் வகையில் அகஸ்தியா என்ற தொண்டு நிறுவனத்தை கற்பித்தல் பணி நியமனத்தை கண்டித்தும் அதனை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும் கல்வி நிறுவனங்களில் ஆர்எஸ்எஸ், பிஜேபி நபர்களை நியமனம் செய்வதை தடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய மாணவர் சங்க நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu