மாநகராட்சி அலுவலர்கள் மீது பாலியல் புகார் அளித்த பெண் மீது பணம் கையாடல் புகார்
அதிகாரிகள் மீது பாலியல் புகார் தெரிவித்த பெண்ணை கண்டித்து, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பாகுபலி சுய உதவி குழுவினர், மாநகராட்சி தற்காலிக ஊழியர்கள், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் மாநகராட்சியில், 36 வது வார்டில் முன்கள பணியாளராக பணியாற்றிய ஷகிலா பானு என்பவர், தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, ஏஐடியுசி சங்க தலைவர் ஷாநவாஸ், மாநகராட்சி அலுவலர்கள் மூர்த்தி மற்றும் மாணிக்கவாசகம் ஆகிய 3 பேர் மீது, முதலமைச்சரின் தனிப்பிரிவு, மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர், உதவி ஆணையாளர், மாநகர காவல் ஆணையாளர் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளிடம் புகார் மனு அளித்திருந்தார். அதன்பேரில் தற்போது 3 ஆவது நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஷகிலாபானு தலைமை வகித்து வந்த பாகுபலி சுய உதவிக் குழுவில், 90 ஆயிரம் ரூபாய் பணம் கையாடல் செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பணம் கையாடல் குறித்து விசாரணை நடத்தி பணியை விட்டு நீக்கம் செய்த மாநகராட்சி அலுவலர்கள் மீது, ஷகிலா பானு பாலியல் தொந்தரவு செய்ததாக பொய் புகார் அளித்துள்ளதாக கூறி, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பாகுபலி சுய உதவி குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாநகராட்சியில் தற்காலிகமாக பணியாற்றும் நபர்களும் கலந்து கொண்டு ஷகிலாபானுவை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
மாநகராட்சி அலுவலர்கள் மீது பெண் ஊழியர் ஒருவர் பாலியல் புகார் அளித்த இரண்டாவது நாளில், சக பெண் ஊழியர்கள் அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu