சேலத்தில் மழைநீர் வடிகால் தூய்மைப்பணியினை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

சேலத்தில் மழைநீர் வடிகால் தூய்மைப்பணியினை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு
X

சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் தூய்மைப்பணியினை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்.

சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் தூய்மைப்பணியினை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு செய்தார்.

சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் கடந்த 20ம் தேதி முதல் 25 வரை 5 நாட்கள் மாபெரும் மழைநீர் வடிகால் தூய்மைப்பணி முகாம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று, கொண்டலாம்பட்டி மண்டலம் ராஜ வாய்க்கால் ஓடை சுமார் 1.5 கிலோ மீட்டர் நீளத்திற்கு தூர்வாரும் பணி, ரங்காபுரம் சுண்ணாப்புக்கார வீதி ஓடை 200 மீட்டர் நீளத்திற்கு தூர்வாரும் பணியையும், பெரியார் வளைவு ஓடை தூர்வாரும் பணியும் நடைபெற்றது.

இதேபோல் அஸ்தம்பட்டி மண்டலம் காமாட்சி நகர் மழைநீர் வடிகால் கால்வாய் தூர்வாரும் பணி, சீலாவரி ஏரி முதல் திருமணிமுத்தாறு வரை ராமமூர்த்தி புதூர் ஓடை 900 மீட்டர் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணியினை மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் நேரில் ஆய்வு செய்தார்.

அதனை தொடர்ந்து கல்லாங்காடு குடியிருப்பு பகுதியில் ரூ.30 இலட்சம் மதிப்பில் பேவர் பிளாக் கல் பதிக்கும் பணி நடைபெற்ற வருகிறது. இப்பணியினை ஆய்வு செய்த ஆணையாளர் அவர்கள் கல்லின் தரம், கல்லின் அளவு ஆகியவற்றை அளவீடு செய்து ஆய்வு செய்தார்.

மேலும், அந்த பகுதியில் தெரு விளக்கு, குடிநீர் மற்றும் சாக்கடை வசதிகள் போன்ற அனைத்து அடிப்படை வசதிகள் உள்ளதா என்பதை நேரில் ஆய்வு செய்தார். இதையடுத்து பேவர் பிளாக் கல் பதிக்கும் பணியை விரைந்து முடித்திட வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்திரவிட்டார்.


Tags

Next Story
why is ai important to the future