/* */

கொரோனா தடுப்பு பணிகள்: அதிமுக எம்எல்ஏக்கள் குற்றச்சாட்டு

சேலத்தில் கொரோனா தடுப்பு பணிகள் மேற்கொள்வதில் அதிமுக எம்எல்ஏக்களை, அமைச்சர் மற்றும் அதிகாரிகள் புறக்கணிப்பதாக அதிமுக எம்எல்ஏக்கள் குற்றச்சாட்டு

HIGHLIGHTS

கொரோனா தடுப்பு பணிகள்: அதிமுக எம்எல்ஏக்கள் குற்றச்சாட்டு
X

சேலத்தில் கொரோனா தடுப்பு பணிகள் மேற்கொள்வதில் அதிமுக எம்எல்ஏக்களை, அமைச்சர் மற்றும் அதிகாரிகள் புறக்கணிப்பதாக அதிமுக எம்எல்ஏக்கள் குற்றச்சாட்டு..

சேலம் கொண்டலாம்பட்டி பகுதியில் உள்ள வீரபாண்டி சட்டமன்ற அலுவலகத்தில் அதிமுக அமைப்புச் செயலாளர் செம்மலை தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இதை தொடர்ந்து சேலத்தில் உள்ள 9 அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது எம்எல்ஏக்கள் கூறியது,

சேலத்தில் நடைபெற்ற அரசு ஆலோசனை கூட்டத்திற்கு அதிமுக எம்எல்ஏக்கள் ஒரு சிலரை மட்டுமே அழைக்கிறார்கள். அதிமுக எம்எல்ஏக்களை அதிகாரிகளும், அமைச்சரும் புறக்கணிக்கிறார்கள் என்றும் குற்றம்சாட்டினார்கள்.

இணை இயக்குனர் அறிவித்தப்படிதான் சேலத்தில் 3800 படுக்கைகள் மட்டுமே உள்ளன என்பதை எதிர்கட்சி தலைவர் தெரிவித்தார். அதில் எந்த அரசியலும் இல்லை ; ஆனால் மாவட்டம் முழுவதும் 11,500 படுக்கைகள் உள்ளதாக கூறும் அமைச்சர் செந்தில்பாலாஜி இது தொடர்பான பட்டியலை வெளியிட வேண்டும். படுக்கை வசதிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா? என்று கேள்வி எழுப்பினார்கள்.

இரும்பாலையில் 500 ஆக்சிஜன் படுக்கை வசதியை முதல்வர் திறந்து வைத்த நிலையில் அவசர கதியில் அங்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட இருவர் பலியானதாக குற்றம் சாட்டினர்.

சேலம் மாநகரில் உள்ள 3 தகன மேடையில் மட்டும் சராசரியாக 15 முதல் 26 நபர்கள் வரை எரியூட்டப்படுகிறது. ஆனால் கொரோனா இறப்பை அரசு குறைத்து கூறுகிறது. தவறுகளை சுட்டிக் காட்டுவது தான் எதிர்கட்சியின் கடமை ; ஆனால் அமைச்சர் எதிர்கட்சி தலைவர் குறித்து பேசியது தவறானது. சுகாதார இணை இயக்குனர் படுக்கைகள் விபரம் குறித்து உண்மை தகவலை தெரிவிக்க மறுக்கிறார் என்றும் கூறினார்கள்.

போதுமான படுக்கைகள் இருப்பு இருந்தால் அரசு மருத்துவமனை வாசலில் ஏன் நோயாளிகள் காத்திருக்கின்றனர்.அமைச்சரின் அறிவிப்புகள் வெறும் காகிதத்தில் மட்டுமே தவிர, செயல்பாட்டில் அல்ல என்றும் பேசினர்.

Updated On: 29 May 2021 4:30 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    ஸ்டாலின் கைது செய்யப்படுவார்: கெஜ்ரிவால் திடீர் கண்டு பிடிப்பு
  2. வீடியோ
    மூன்று வருட திமுக ஆட்சி நிறைவு | சவுக்கு சங்கர் கைது | மக்களின் மனநிலை...
  3. இந்தியா
    4ம் கட்டமாக 96 நாடாளுமன்ற தொகுதி, ஆந்திர சட்டசபைக்கு நாளை தேர்தல்
  4. கல்வி
    கல்லூரி சேர்க்கையில் வெளிமாநில மாணவர்களால் பாதிப்பா?
  5. நாமக்கல்
    நீர்நிலைகளை மறைத்து சிப்காட்: தடுப்பு அணையில் நின்று விவசாயிகள்...
  6. தொழில்நுட்பம்
    இ-காமர்ஸ் சுரண்டல் அட்டை..! புதிய மோசடி..! உஷார் மக்களே..!
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. லைஃப்ஸ்டைல்
    மனம் விட்டுப் பேசு... மனமே லேசு!
  10. லைஃப்ஸ்டைல்
    உங்கள் மனைவியுடன் சண்டையிட்ட பிறகு சமாதானம் செய்வது எப்படி?