கொரோனா எதிரொலி சேலம் வ,.உ.சி மார்க்கெட் மூடல்

கொரோனா எதிரொலி சேலம் வ,.உ.சி மார்க்கெட் மூடல்
X
சேலம் வ.ஊ.சி பூ மார்க்கெட்டில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து இன்று முதல் பூ மார்க்கெட் மூடப்படுவதாக மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் வேகம் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. மாவட்டத்தில் இதுவரை 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை கட்டுப்படுத்த அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள போஸ் மைதானத்தில் செயல்பட்டு வரும் வ.உ.சி பூ மார்க்கெட்டில் 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதால் இன்று முதல் மறு உத்தரவு வரும்வரை வஉசி பூ மார்க்கெட் மூடப்படுவதாக மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் தெரிவித்தார். மேலும் இந்த மார்க்கெட்டில் பணியாற்றும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது..

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!