பாரில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் கத்தியால் குத்திக்கொலை....

பாரில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் கத்தியால் குத்திக்கொலை....
X

கொலையான கிருபாகரன்

சேலத்தில் மதுபான பாரில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் குத்திக்கொலை. ஒருவர் கைது. மற்றொரு குற்றவாளியை தேடி வருகின்றனர்

சேலம் கிச்சிப்பாளையம் பகுதியில் தள்ளுவண்டியில் வியாபாரம் செய்து வந்தவர் கிருபாகரன்(40) . நேற்று ஆனந்தாபாலம் அருகே உள்ள மதுபானகடையில் நேற்று இரவு தனது நண்பரான ஆமதி உசேன், சீனிவாசன் ஆகியோருடன் மது அருந்திக் கொண்டிருந்தார். அதே பகுதியில் மேட்டுத்தெருவைச் சேர்ந்த மோகன் அவரது நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்தார்.

மோகன் கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பாக கிருபாகரனின் நண்பர் ஒருவர் மனைவியுடன் சுற்றித் திரிந்து வந்ததாக கூறப்படுகிறது. ஏற்கனவே பிரச்சினை இருந்து வந்த நிலையில் மது அருந்திக் கொண்டிருந்த போது இருதரப்பு இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றி தகராறாக மாறிய நிலையில் மோகன், அவரது நண்பர் கோபாலகிருஷ்ணன் ஆகிய இருவரும் பீர்பாட்டிலை உடைத்து கிருபாகரன், சீனிவாசன் ஆகியோரை சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும் மோகன் வைத்திருந்த கத்தியால் கிருபாகரனை வயிற்றில் குத்தியுள்ளார்.

இதனால் படுகாயமடைந்த கிருபாகரன், சீனிவாசன் மற்றும் தகராறை தடுக்க வந்து அம்ஜத் ஆகியோர் படுகாயமடைந்து சேலம் அரசு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்த டவுன் காவல்துறையினர் இந்த மோதல் தொடர்பாக ஒருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் இன்று பிரபாகரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததையடுத்து, இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி முக்கிய குற்றவாளி மோகன் உள்ளிட்ட 2 பேரை தேடி வருகின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்