பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயம்: சேலத்தில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயம்: சேலத்தில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
X

சேலத்தில் கண்டன ஆர்பாட்டம் செய்த பிஎஸ்என்எல் ஊழியர்கள்.

பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கண்டித்து சேலத்தில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பிஎஸ்என்எல் எம்பிளாய் யூனியன் அகில இந்திய சங்கத்தின் வழி காட்டுதலுக்கு இணங்க பிஎஸ்என்எல் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 50க்கும் மேற்பட்டோர் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் பிஎஸ்என்எல் கோட்ட பொது மேலாளர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை நிறுத்த வேண்டும். ஒவ்வொரு மாதமும், மாதத்தின் இறுதி நாளில் ஊதியம் வழங்க வேண்டும்.

ஊழியர்களுக்கு 3வது ஊதிய மாற்ற பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். ஊதிய மாற்ற பிரச்சனையை இணைக்காமல், 15% நிர்ணய பலனுடன் ஓய்வூதிய மாற்றத்தை அமல்படுத்த வேண்டும். நேரடி நியமன ஊழியர்களுக்கு 30% ஓய்வூதிய பலன்களை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!