ஏரியில் குளிக்க சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

ஏரியில் குளிக்க சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு
X

சிறுவனை தேடும் பணியில் தீயணைப்பு துறையினர்.

சேலத்தில் நண்பர்களுடன் விநாயகர் சிலையை ஏரியில் கரைத்துவிட்டு குளிக்க சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு.

சேலம் செவ்வாய்பேட்டை பஞ்சம்தாங்கி ஏரி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர்கள் வீட்டில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஒரு அடி விநாயகர் சிலையை வைத்து வழிபாடு நடத்தி விட்டு சிலை கரைப்பதற்காக சுப்பிரமணியின் மகன்கள் தீபக்குமார், யுவராஜ் மற்றும் அவரது நண்பர்கள் கோபாலகிருஷ்ணன், இம்ரான் ஆகிய நான்கு பேரும் எருமாபாளையம் பகுதியில் உள்ள குருவிபனை ஏரியில் நேற்று மாலை சிலையைக் கரைக்க சென்றனர். நான்கு பேரும் சிலையை கரைத்துவிட்டு ஏரியில் குளிக்க சென்றனர்.

இந்நிலையில் 4 சிறுவர்களில் இம்ரான் (13) என்ற சிறுவன் நீண்ட நேரம் ஆகியும் வராததால் அதிர்ச்சி அடைந்த சக நண்பர்கள் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இதுகுறித்து செவ்வாய்பேட்டை தீயணைப்பு துறையினருக்கும், கிச்சிப்பாளையம் காவல் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர் விரைந்து சென்று ஏரியில் மூழ்கிய சிறுவனை சுமார் இரண்டு மணி நேரமாக தேடி சிறுவனை சடலமாக மீட்டனர். தொடர்ந்து பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
ai automation in agriculture