சேலம் மாநகராட்சி பகுதிகளில் கை கழுவும் முறை : விழிப்புணர்வு முகாம்
சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் கைகளை கழுவும் முறை குறித்த விழிப்புணர்வு முகாம் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் துவக்கி வைத்தார்.
சேலம் மாநகராட்சி குகை நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில், கொரோனா நோய் தொற்று தடுப்பு விழிப்புணர்வு முகாமின் ஒரு பகுதியான கைகளை கழுவும் முறைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான முகாமினை மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் இன்று துவக்கி வைத்தார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய மாநகராட்சி ஆணையாளர்:
கொரோனா நோய் தொற்று தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு வாரம் 01.8.2021 முதல் 07.8.2021 வரை நடத்திட தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் கைகளை சுத்தமாக வைத்திருப்பதன் அவசியம் குறித்தும், கைகளை கழுவும் முறைகள் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கையோடு கை சேர்த்து கழுவ வேண்டும், வலது விரல்களை இடது விரல் இடுக்குகளில் நுழைத்து மாறி மாறி தேய்க்க வேண்டும், விரல்களை கோர்த்து இரு கைகளையும் தேய்க்க வேண்டும். கைகளை விரல்களின் பின்பக்கமாக தேய்க்கவும், கட்டை விரல்களை சுழற்றி இரு கைகளையும் தேய்க்கவும், பின்பக்கம் முன்பக்கமாக விரல்களை சுழற்றி சுழற்றி தேய்த்து கழுவ வேண்டும் போன்ற வழிமுறைகளை பொதுமக்கள் அனைவரும் பின்பற்றிட வேண்டும்.
இந்த வழிமுறைகளை மற்றவர்களுக்கும் எடுத்துக் கூற வேண்டும். வீட்டை விட்டு வெளியில் சென்று வந்த பிறகு கைகளை சுத்தமாக சோப்பு பயன்படுத்தி கழுவிட வேண்டும். இது போன்ற வழிமுறைகளை அனைவரும் அவசியம் கடை பிடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu