தாபா ஓட்டலில் மது விற்ற 6 பேர் கைது

தாபா ஓட்டலில் மது விற்ற 6 பேர் கைது
X

சேலம் கிச்சிப்பாளையம் அருகில் உள்ள எருமாப்பாளையத்தில் தாபா ஓட்டலில் மதுவிற்பனை படுஜோராக நடப்பதாக போலீஸ் கமிஷனருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது.

இந்நிலையில் நேற்று துணை கமிஷனர் செந்திலுக்கு கிடைத்த தகவலின் பேரில், அவர் நேரடியாக தாபா ஓட்டலில் அதிரடி சோதனை நடத்தினார். இதில் மது விற்பனை நடந்தது தெரியவந்தது. அதே நேரத்தில் அவர் செல்வதற்கு முன்பு அங்கிருந்த மதுபாட்டில்களை கொண்டு சென்றுவிட்டனர்.

சம்பவ இடம் வந்த இன்ஸ்பெக்டர் சிவக்குமார், எஸ்.ஐ. வினோத்குமார் ஆகியோர் விசாரணை நடத்தினர். ஒரு தாபாவில் எருமாபாளையத்தை சேர்ந்த செந்தில்குமார், சவுந்திரகுமார் ஆகியோரையும், இன்னொரு தாபா உரிமையாளர்களான கருங்கல் பட்டியை சேர்ந்த கார்த்திகேயன், அய்யப்பன், தேவசேனாதிபதி, சீனிவாசன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து மது விற்பனை நடக்கிறதா? என்பதை போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

Tags

Next Story
ai powered agriculture