6 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்

6 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்
X

சேலத்தில் 6 இன்ஸ்பெக்டர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சட்டமன்ற தேர்தலையொட்டி சொந்த மாவட்டத்தில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர்கள், சப்இன்ஸ்பெக்டர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி சேலம் மாநகரில் பணியாற்றி வந்த பெண் இன்ஸ்பெக்டர்கள் சுந்தராம்பாள், விஜயா, இந்திரா, சரோஜா, வளர்மதி, வேதபிறவி ஆகியோர் வேறு மாவட்டத்திற்கு மாற்றப்பட்டனர்.

சேலத்திற்கு இன்ஸ்பெக்டர்கள் செல்லமுத்து, அன்பழகன், சந்தோஷ்குமார், குமார் ஆகியோர் வந்தனர். இவர்களில் 4 பேர் காவல்நிலையத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளனர். செல்லமுத்து டவுன் காவல்நிலையத்துக்கும், அன்பழகன் கன்னங்குறிச்சிக்கும், சந்தோஷ்குமார் சைபர்கிரைம் காவல் நிலையத்துக்கும், குமார் கொடுங்குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்னர்.

Tags

Next Story
ai as the future