டிச. 27ம் தேதி முதல் லாரி உரிமையாளர்கள் காலவரையறையற்ற போராட்டம்

டிச. 27ம் தேதி முதல் லாரி உரிமையாளர்கள் காலவரையறையற்ற போராட்டம்
X

வரும் 27ஆம் தேதி முதல் லாரி உரிமையாளர்கள் காலவரையறையற்ற போராட்டம் தொடங்க உள்ள நிலையில் 26ம் தேதி முதல் லாரி புக்கிங் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு லாரி புக்கிங் ஏஜெண்டுகள் சங்கத்தலைவர் ராஜவடிவேல் சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.அப்போது அவர் கூறும் போது, லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ள காலவரையறையற்ற போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக வரும் 26 ஆம் தேதி முதல் லாரி புக்கிங் நிறுத்தப்படுவதாகவும், இதன்மூலம் உணவு தானிய பொருட்கள் கட்டுமானப் பொருட்கள் ஆகியவை புக்கிங் செய்யப்படமாட்டாது என்று தெரிவித்தார். இதன்மூலம், தமிழகம் முழுவதும் நாள் ஒன்றுக்கு ரூபாய் பத்தாயிரம் கோடி பொருட்கள் தேக்கமடையும் என்றும் பொதுமக்களுக்கான அத்தியாவசிய பொருட்கள் விநியோகத்தில் எந்த தடையும் இருக்காது என்றும் தெரிவித்தார்.

ஏற்கனவே கொரோனா தொற்று பரவல் காரணமாக லாரி தொழில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அரசின் நடவடிக்கையால் லாரி உரிமையாளர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாவதால் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ராஜ வடிவேல் கோரிக்கை விடுத்தார். மேலும் டீசல் விலையை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை நிர்ணயிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி