கானா பாடலுடன் பிறந்தநாள் கொண்டாடிய பிரபல ரவுடி கைது

கானா பாடலுடன் பிறந்தநாள் கொண்டாடிய  பிரபல  ரவுடி கைது
X

சேலத்தில் கானா பாடலுடன் பிறந்தநாள் கொண்டாடிய பிரபல ரவுடி கைது செய்யப்பட்டார்.

சேலம் சின்னக்கொல்லப்பட்டியை சேர்ந்தவர் அசாருதீன். ரவுடியான இவர் மீது பலாத்காரம், வழிப்பறி உள்பட 5 வழக்குகள் உள்ளது. இந்நிலையில் சமூக வலைதளங்களில் ரவுடி அசாருதீனை புகழ்ந்து கானா பாடல் ஒன்று வைரலாக பரவியது. அடர்ந்த காட்டுக்குள் இருக்கும் அசாருதீனை பாராட்டி இளைஞர் ஒருவர் கானா பாடல் பாடுகிறார். அந்த பாடலின் கடைசி வரியில் "அசார் அண்ணன தொட்டா தலய வெட்டி கையில பிடிச்சுக்குவோம்" என வரிகள் வருகிறது.அதே போல் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் பெரிய கேக்கை வெட்டி ரவுடி அசாருதீன் கொண்டாடும் காட்சியும் வெளியாகியுள்ளது .

இதுகுறித்த தகவல் மாநகர காவல் ஆணையாளர் சந்தோஷ்குமாருக்கு தெரிவிக்கப்பட்டது. பாடலில் கொலை செய்வேன் என வெளிப்படையாக அச்சுறுத்தும் அக்கும்பலை கூண்டோடு பிடிக்க அவர் உத்தரவிட்டார். இதையடுத்து தனிப்படை போலீசாரின் பிடியில் ரவுடி அசாருதீன் சிக்கினார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் தேடுவதை அறிந்து கொண்ட கானா பாட்டு பாடிய இளைஞர் சென்னைக்கு தப்பி ஓடிவிட்டார். அவருடன் இருந்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
ai as the future