தேர்தல் பாதுகாப்பை உணர்த்த கொடி அணிவகுப்பு

தேர்தல் பாதுகாப்பை உணர்த்த  கொடி அணிவகுப்பு
X
சட்டமன்ற தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க ஏதுவாக சேலத்தில் மாநகர காவல்துறை மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பங்கேற்ற கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 6-ந் தேதி நடக்கவுள்ள நிலையில் பொதுமக்கள் இடையே நிலவி வரும் அச்சத்தை போக்கவும், சட்டம் - ஒழுங்கை காப்பாற்றவும் போலீசார் தயார் நிலையில் உள்ளனர். என்பதை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் சேலத்தில் மத்திய பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசாரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

இதில் சேலம் மாநகர போலீசார் மற்றும் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக வந்துள்ள மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் என 250 பேர் கலந்து கொண்டனர். சேலம் நகர பேருந்து நிலையம் அருகில் இருந்து தொடங்கிய அணிவகுப்பு கிச்சிபாளையம், களரம்பட்டி வழியாக எருமாபாளையம் வரை 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு அணிவகுப்பு நடைபெற்றது. இதற்கு மாநகர காவல் ஆணையாளர் சந்தோஷ்குமார் தலைமை தாங்கினார். துணை ஆணையாளர்கள் செந்தில், சந்திரசேகர் உள்பட காவல்துறை அதிகாரிகள் பலர் பங்கேற்றனர். மத்திய பாதுகாப்புப் படையினர் மற்றும் போலீசார் கைகளில் துப்பாக்கிகளுடன் அணிவகுத்து சென்றனர்.

இதைத் தொடர்ந்து மாநகர போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பதற்றமான பகுதிகளில் கொடி அணிவகுப்பு நடைபெறும் என்று போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
ai and business intelligence