திருமணத்தில் மணமக்களுக்கு பெட்ரோல் பரிசு

திருமணத்தில் மணமக்களுக்கு பெட்ரோல் பரிசு
X

சேலத்தில் நடந்த திருமணவிழா ஒன்றில் மணமக்களுக்கு பெட்ரோலை பரிசாக மணப்பெண்ணின் உறவினர் வழங்கியது நகைப்பை ஏற்படுத்தியது.

தினசரி பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மற்ற பொருட்களின் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில், சேலத்தில் நடந்த திருமண விழா ஒன்றில் மணமக்களின் உறவினர் ஒருவர் தற்போது விலை உயர்ந்து காணப்படும் பெட்ரோலை பரிசாக அளித்துள்ளார்.

வேலூர் பகுதியை சேர்ந்த முகமது ரகுபதின் என்பவருக்கும், கர்நாடக மாநிலம் சிமோகா பகுதியை சேர்ந்த ஜபசூம் நசியா என்பவருக்கும் சேலம் கோட்டை பகுதியில் இன்று திருமணம் நடைபெற்றது. இதில் மணமகளின் உறவினர் முகமது காசிம் என்பவர் மணமக்களுக்கு 5 லிட்டர் பெட்ரோலை திருமண பரிசாக வழங்கினார். மணமக்களுக்கு திருமண பரிசாக பெட்ரோலை வழங்கியது திருமணவிழாவில் சுவாரசியத்தை ஏற்படுத்தும் விதமாக இருந்தது.

Tags

Next Story
மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 640 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு