சேலத்தில் கட்டுப்பாடுகளுடன் பள்ளிகள் திறப்பு

சேலத்தில் கட்டுப்பாடுகளுடன் பள்ளிகள் திறப்பு
X

சேலத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகள் பல மாதங்களுக்கு பிறகு ஆர்வமுடன் பள்ளிக்கு வருகை தந்தனர்.

தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த 10 மாதங்களாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தது. தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்த நிலையில் 10 மற்றும் 12 வகுப்பு படிக்கும் மாணவ,மாணவிகளுக்கு பொது தேர்வு நடைபெறுவதை கருத்தில் கொண்டு அவர்களுக்கு பள்ளிகள் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.அதன்படி சேலம் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் என 600 பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்புகளில் 88 ஆயிரத்து 226 மாணவ மாணவிகள் படிக்கின்றனர். அரசு உத்தரவின் படி பள்ளிகள் திறக்கப்படுவதால் அனைத்து பள்ளிகளிலும் வகுப்பறைகள், பள்ளி வளாகங்கள் மற்றும் கழிவறை உள்ளிட்ட அனைத்தும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் சேலத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் வகுப்பறைக்கு 20 முதல் 24 மாணவர்கள் வீதம் அனுமதிக்கப்படுகின்றனர். இதற்காக பத்தாம்வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு 12 வகுப்பறைகளும், பத்தாம்வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு 12 வகுப்பறைகள் என பிரிக்கப்பட்டுள்ளது. பள்ளியில் நுழைவதற்கு முன்பாக உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு, கிருமிநாசினி கொடுக்கப்பட்டு முகக் கவசம் அணிந்த பிறகே வகுப்பறைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். வகுப்பறையில் பெஞ்சுக்கு 2 மாணவர்கள் வீதம் அமர்த்தப்பட்டு வகுப்பறைகள் எடுக்கப்பட்டு வருகிறது. உணவு இடைவேளையின் போது மாணவிகள் அமரும் இடத்திலேயே உணவு சாப்பிடும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags

Next Story
ai in future agriculture