சேலத்தில் உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு: வாக்காளர்கள் ஆர்வம்
வாக்குச்சாவடி மையம் ஒன்றில் வாக்களித்த வாக்காளர்.
தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல், ஒரே கட்டமாக நடைபெற்று வருகிறது. இதில் சேலம் மாவட்டத்தை பொருத்தவரை 1 மாநகராட்சி 6 நகராட்சிகள் 31 பேரூராட்சிகள் என மொத்தம் 699 பதவிகளுக்கு நான்கு பேர் போட்டியின்றி தேர்வான நிலையில் மீதமுள்ள 695 பதவிகளுக்கு 1514 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது.
இதில் 13 லட்சத்து 56 ஆயிரத்து 308 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர் வாக்குப்பதிவு பணிகளில் 7267 அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும் பதட்டமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்ட 276 வாக்குச்சாவடிகளில் 138 நுண் பார்வையாளர்கள் மூலமாகவும் மீதமுள்ள 138 வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இன்று நடைபெறும் இந்த வாக்குப்பதிவில் எவ்வித அசம்பாவிதமும் நிகழாமல் இருக்க சுமார் 4 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதன்படி சேலம் மாவட்டம் முழுவதும் இன்று காலை 7 மணி முதல் துவங்கி அமைதியான முறையில், அதே நேரம் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஆர்வமுடன் வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu