திருமணமாகாத விரக்தியில் மாரியம்மன் கோவில் சிலைகளை உடைத்த இளைஞர் கைது

திருமணமாகாத விரக்தியில் மாரியம்மன் கோவில் சிலைகளை உடைத்த இளைஞர் கைது
X

கைது செய்யப்பட்ட சதீஷ்.

சேலம் அருகே திருமணமாகாத விரக்தியில் மாரியம்மன் கோவிலில் இருந்த 5 சாமி சிலைகளை உடைத்த இளைஞர் கைது.

சேலம் கன்னங்குறிச்சி ஆத்துக்காடு பகுதியில் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு இன்று பொதுமக்கள் வழிபாடு நடத்த சென்றபோது கோவில் வளாகத்தின் முன்பகுதியில் உள்ள நவக்கிரக சிலைகள் கேது, சூரியன், புதன் உள்ளிட்ட ஐந்து சிலைகள் உடைக்கப்பட்டு கிடந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் கன்னங்குறிச்சி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

பின்னர் தகவலின் பேரில் விரைந்து வந்த உதவி ஆணையாளர் ஆனந்த்குமார் தலைமையிலான காவல்துறையினர் கோவிலுக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது வேம்படிதாளம் பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவர் சிலையை உடைத்தது கண்டுபிடிக்கப்பட்டு அவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் தாயை இழந்து சித்தி வீட்டில் தங்கியிருக்கும் சதீஷ் மாரியம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து கொண்டிருந்தபோது, திருமணமாகாத விரக்தியில் சாமி சிலைகளை உடைத்ததாக போலீசாரிடம் தெரிவித்தார்.

Tags

Next Story
ai problems in healthcare