சேலம் மாநகராட்சி ஊழியர்களுக்கு யாேகா புத்துணர்வு முகாம்

சேலம் மாநகராட்சி ஊழியர்களுக்கு யாேகா புத்துணர்வு முகாம்
X

சேலம் மாநகராட்சிப் பணியாளர்களுக்கான யோகா புத்துணர்வு முகாமை மாநகராட்சி ஆணையாளர் துவக்கி வைத்தார்.

சேலம் மாநகராட்சிப் பணியாளர்களுக்கான யோகா புத்துணர்வு முகாம் மாநகராட்சி ஆணையாளர் துவக்கி வைத்தார்.

சேலம் மாநகராட்சி ஆணையாளர் அலுவலகத்தில் இன்று சேலம் மாநகராட்சி மற்றும் யோகா இயற்கை மருத்துவத்துறை, அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை இணைந்து நடத்திய மாநகராட்சிப் பணியாளர்களுக்கான யோகா புத்துணர்வு முகாமை மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் துவக்கி வைத்து யோகா பயிற்சியிலும் ஈடுபட்டார். யோகா மற்றும் இயற்கை மருத்துவத்துறையின் மருத்துவ அலுவலர் மருத்துவர்.ஏ.எம்.சுதாகர் அவர்களால் பயிற்சி அளிக்கப்பட்டது.

இம்முகாமில் சுவாசப் பயிற்சி, பிரணயாமம், ஆசனங்கள் மற்றும் தியானம் கற்றுத்தரப்பட்டது. தொடர்ந்து யோகாப் பயிற்சி மேற்கொண்ட அனைவருக்கும் நோய் எதிர்பு சக்தியை அதிகப்படுத்தக் கூடிய இயற்கை நோய் எதிப்பு சக்தி பானம் வழங்கப்பட்டது. உடல் மற்றும் மன ஆரோக்கியம், அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு அவசியம் தேவை என்பதை கருத்தில் கொண்டு சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களுக்கும் சுழற்சி முறையில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இன்று துவங்கிய யோகா பயிற்சியில் 28 பணியாளர்கள் கலந்து கொண்டனர். 4 நாட்களுக்கு இவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இதே போன்று வாரம் தோறும் 28 பணியாளர்கள் வீதம் 84 பணியாளர்களுக்கு யோகாப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

Tags

Next Story
ஜலதோஷத்துக்குலாமா டாக்டர் கிட்ட போறீங்களா..? இனிமே இத பண்ணுங்க..!