"நாங்கள் பேசாவிட்டால் என்ன? எங்கள் வாக்குகள் பேசும் "- மாற்றுத் திறனாளிகள்
2021 சட்டமன்ற தேர்தல் களம் விறுவிறுப்படைந்துள்ள நிலையில் வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு பல்வேறு இடங்களில் மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்று திறனாளிகள் சார்பில் நடைபெற்ற வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாத 20 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு வாக்களிப்பது ஜனநாயக கடமை என்பதை வலியுறுத்தும் விதமாக மாற்று திறனாளிகள் அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்றும், வாக்களிக்கும் தகுதி கொண்ட அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
மேலும் "ஓசையில்லா ஓட்டினை மாற்று திறனாளிகளான நாம் பதிவிடுவோம் சரியான வேளையில்", "நாங்கள் பேசாவிட்டால் என்ன? எங்கள் வாக்குகள் பேசும் " என்பன உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு அணிவகுத்து நின்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu